▶ பனிப்பொழிவு, பலத்த காற்று.. சீரற்ற காலநிலை.. 31 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
22 கார்த்திகை 2024 வெள்ளி 06:34 | பார்வைகள் : 1004
நேற்று வியாழக்கிழமை நாடு முழுவதும் கடும்பனி கொட்டித்தீர்த்ததை அடுத்து, இன்று இரண்டாம் நாள் வெள்ளிக்கிழமை அதே அனர்த்தம் தொடர்வதாக வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.
Caetano புயல் நேற்று இரவு கிழக்கு நோக்கி நகர்ந்துள்ளது. இருந்தபோதும் அனர்த்தம் தொடர்வதாகவும், 29 மாவட்டங்கள் பனிப்பொழிவின் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கையும், இரு மாவட்டங்கள் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டு செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்படுவதாக வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.
பனிப்பொழிவு எச்சரிக்கைக்குள் தலைநகர் பரிஸ் உட்பட இல் து பிரான்சின் அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, Corsica தீவில் உள்ள இரு மாவட்டங்களுக்கும் இந்த புயல் எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும், அங்கு அதிகபட்சமாக 160 கி. மீ வேகம் வரை புயல் வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.