Paristamil Navigation Paristamil advert login

பேருந்து கவிழ்ந்தது.. 37 பேர் காயம்.. ஐவர் உயிருக்கு போராட்டம்!

பேருந்து கவிழ்ந்தது.. 37 பேர் காயம்.. ஐவர் உயிருக்கு போராட்டம்!

22 கார்த்திகை 2024 வெள்ளி 09:39 | பார்வைகள் : 5123


A6B சாலையில் இடம்பெற்ற கோர விபத்தொன்றில் 37 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஐவர் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

நேற்று வியாழக்கிழமைக்கும் இன்று வெள்ளிக்கிழமைக்கும் உட்பட்ட இரவில் அதிகாலை 2.30 மணி அளவில் இவ்விபத்து Chevilly-Larue (Val-de-Marne) நகரில் இடம்பெற்றுள்ளது. அதிக பனிப்பொழிவு காரணமாக பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதிகளில் தறிகெட்டு பாய்ந்து, ஏனைய வாகனங்களுடன் மோதி, கவிழ்ந்தது. ஒரு பேருந்தும், நான்கு மகிழுந்துகளும் மோதுண்டுள்ளன.

37 பயணிகளுடன் பயணித்த பேருந்து கவிழ்ந்ததில் அதில் பயணித்த அனைவரும் காயமடைந்துள்ளனர். 

உடனடியாக அங்கு தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு மீட்புப்பணி ஆரம்பிக்கப்பட்டது.
ஐவர் உயிருக்கு போராடும் நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

குறித்த பேருந்து Brest நகர் நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்