Paristamil Navigation Paristamil advert login

தொடரூந்து வெளியே இருந்து முத்தம் கொடுக்க தடை!!

தொடரூந்து வெளியே இருந்து முத்தம் கொடுக்க தடை!!

15 பங்குனி 2019 வெள்ளி 10:30 | பார்வைகள் : 18189


நேற்றைய பிரெஞ்சு புதினத்தில் தொடரூந்தில் நத்தை எடுத்துச் செல்லுவது குறித்து தெரிவித்திருந்தோம் இல்லையா..? இன்று புதிரான வேறு ஒரு சட்டம் குறித்து  பார்க்கலாம்..??! 
 
உங்கள் காதலி தொடரூந்தில் வெளியூர் பயணம் மெற்கொள்ள உள்ளார். அவர் மீதான அளப்பரிய காதலில், நீங்கள் தொடரூந்துக்கு வெளியே நின்றுகொண்டு ஜன்னல் ஊடாக உங்கள் காதலிக்கு ஒரு முத்தம் கொடுக்கொன்றீர்கள்... என்னாகும்?? போலீஸ் பிடித்து உங்களை தூக்கிக்கொண்டு சென்றுவிடுவார்கள். 
 
என்னாது...??!! 
 
அட.. ஆமாப்பா. காதலுக்கே பெயர் போன இந்த பிரான்சில் இப்படி ஒரு நூதன சட்டம் உள்ளது. 
 
பிரெஞ்சு சட்டத்தில் இப்படியான பல நூதனமான சட்டங்கள் நிறைய உள்ளது. அதேபோல் இதுவும் ஒரு பழங்காலத்து சட்டம். இதனை எதிர்த்து ஒருவரும் போராடவில்லை. அதனால் 'அது கெடக்குது கழுத!' என நினைத்து அதை அப்படியே விட்டுவிட்டார்கள். 
 
இந்த சட்டம் ஏன் வந்து? தொடரூந்து மிக சரியான நேரத்தில் பயணப்பட வேண்டும் என்பதால், 'முத்தம்' எல்லாவற்றையும் தொடரூந்து நடைமேடையை வந்தடையும் முன்னரே கொடுத்துவிடவேண்டும் என சொல்கிறது அந்த சட்டம்! 
 
ஏண்டாப்பா.. ட்ரைன் கிளம்புறது கூட தெரியாமலா முத்தம் குடுத்துக்கிட்டிருப்போம் நாங்க??என்னாங்கடே உங்க சட்டம்??

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்