Paristamil Navigation Paristamil advert login

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - பிள்ளையானிடம் இன்றும் வாக்குமூலம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - பிள்ளையானிடம் இன்றும் வாக்குமூலம்!

22 கார்த்திகை 2024 வெள்ளி 12:25 | பார்வைகள் : 6431


பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று  குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மீண்டும் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட வீடியோவில் பிள்ளையானின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை குறித்து வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கு கடந்த 20ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு பிள்ளையானுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, கடந்த 20ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜரான பிள்ளையான், தான் தமிழ் மொழியிலும் வாக்குமூலம் வழங்க வேண்டும் என குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். 

பிள்ளையானின் கோரிக்கைக்கு இணங்க தமிழ் மொழியிலும் வாக்குமூலத்தை பெற்றுக்கொள்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரை இன்றைய தினம்  திணைக்களத்துக்கு அழைத்துள்ளனர். 

6 நாள்கள் முன்னர்

நினைவஞ்சலி

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்