Paristamil Navigation Paristamil advert login

தொடரூந்தில் நத்தையை எடுத்துச் சென்றால் என்னாகும்??!

தொடரூந்தில் நத்தையை எடுத்துச் சென்றால் என்னாகும்??!

14 பங்குனி 2019 வியாழன் 10:30 | பார்வைகள் : 20349


இன்றைய பிரெஞ்சுப் புதினத்தில், சுவாரஷ்யமான ஒரு சம்பவம் குறித்து பார்க்கலாம். 
 
தொடரூந்தில் நீங்கள் உயிரோடு இருக்கும் ஒரு நத்தையை எடுக்குக்கொண்டு சாதாரணமாக பயணம் மேற்கொள்ள முடியாது. நத்தைக்கும் சேர்த்து பணம் செலுத்தவேண்டும். அதாவது பயணச் சிட்டை எடுக்கவேண்டும். 
 
அட, ஆச்சரியப்படாதீர்கள். 2008 ஆம் ஆண்டில் TGV இல் நபர் ஒருவர் உயிருடன் உள்ள நத்தை ஒன்றை எடுத்துக்கொண்டு பயணம் மேற்கொண்டிருந்தார். அவர் நத்தைக்கு பயணச்சிட்டை எடுக்காததால் தண்டப்பணம் கட்ட நேர்ந்தது. 
 
இந்த செய்தி மறுநாள் ஊடகங்களிலெல்லாம் மிகுந்த பரபரபானது. 
 
அப்படி, தண்டப்பணம் அறவிட முடியுமா?.. முடியும். பொது பயணங்களின் போது உயிருடன் உள்ள விலங்கு/ செல்லப்பிராணி எதையாவது நீங்கள் கொண்டு செல்ல நேர்ந்தால் அதற்கும் சேர்த்து பயணச்சிட்டை எடுக்கவேண்டும் என ஒரு சட்டம் உள்ளது. 
 
இன்றைய திகதியில் இது அத்தனை உன்னிப்பாக கவனிக்கப்படுவதில்லை என்றபோதும், 'சட்டவிரோதம்' என்பது மட்டும் உண்மை. 
 
உங்களுக்கு தண்டப்பணம் செலுத்த சொல்லி வலியுறுத்தப்பட்டால், நீங்கள் கட்டியே ஆகவேண்டும்! 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்