Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : McDonald's உணவகத்தில் துப்பாக்கிச்சூடு.. ஒருவர் பலி!

பரிஸ் : McDonald's உணவகத்தில் துப்பாக்கிச்சூடு.. ஒருவர் பலி!

22 கார்த்திகை 2024 வெள்ளி 15:46 | பார்வைகள் : 8275


பரிஸ் 18 ஆம் வட்டாரத்தின் Boulevard d'Ornano பகுதியில் உள்ள McDonald's துரித உணவகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இன்று நவம்பர் 22, வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. ஆயுததாரி ஒருவர் உணவகத்துக்குள் நுழைந்து, அங்கிருந்த ஒருவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். நான்கு தடவைகள் வரை சுடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 60 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச்சூடு மேற்கொண்டவர் 77 வயதுடைய ஒருவர் எனவும், அவர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சிக்கவில்லை எனவும், வேறு யாரையும் தாக்கவோ, மிரட்டவோ முயற்சிக்கவில்லை எனவும், காவல்துறையினர் வரும் வரை காத்திருந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

காவல்துறையினர் குறித்த நபரைக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்