நாளையும் தொடர்கிறது பனிப்பொழிவு.. 40 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
22 கார்த்திகை 2024 வெள்ளி 17:13 | பார்வைகள் : 1426
நாளை, நவம்பர் 23 ஆம் திகதி சனிக்கிழமையும் பனிப்பொழிவு தொடர்வதாக வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது. நேற்றைய நாள் போல் பனிப்பொழிவு வீரியமாக இல்லாத போதும், மூன்றாவது நாளாகவும் பனிப்பொழிவு பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் பரிஸ், இல் து பிரான்சின் அனைத்து மாவட்டங்களுடன், Aisne, Ardennes, Aube, Calvados, Cher, Côte-d'Or, Doubs, Eure, Eure-et-Loir, Jura, Loir-et-Cher, Loiret, Manche, Marne, Haute-Marne, Mayenne, Meurthe-et-Moselle, Meuse, Moselle, Nièvre, Oise, Orne, Bas-Rhin, Haut-Rhin, Haute-Saône, Saône-et-Loire, Sarthe, Paris, Seine-Maritime, Seine-et-Marne, Yvelines, Somme, Vosges, Yonne, Territoire de Belfort, Essonne, Hauts-de-Seine, Seine-Saint-Denis, Val-de-Marne மற்றும் Val-d'Oise ஆகிய 40 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, Ardennes, Gers, Indre-et-Loire, Landes, Meuse மற்றும் Vosges ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு வெள்ள அனர்த்தம் காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.