Paristamil Navigation Paristamil advert login

பழைய பரிசும் பத்து புகைப்படங்களும்!!

பழைய பரிசும் பத்து புகைப்படங்களும்!!

13 பங்குனி 2019 புதன் 10:30 | பார்வைகள் : 18560


பரிசை தினமும் தான் தரிசிக்கின்றோம். நாகரீகங்கள் பிரான்சில் வளர்ந்தது என சொல்வதுண்டு. இன்றைய பிரெஞ்சுப் புதினத்தில், பழையகால பரிசில் எடுக்கப்பட்ட சில 'அடடா!' புகைப்படங்களை உங்களுக்காக தொகுத்துள்ளோம். 
 
01: இந்த புகைப்படத்தை கவனமாக பாருங்கள்.. அட.. Rue de Seine தான். பொக்கிஷமான இந்த புகைப்படம் 1900 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. (119 வருடங்களுக்கு முன்னர்!) 
 
 
02: 1910 ஆம் வருடம் பரிசில் மிகப்பெரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது. மிகப்பெரிய அனர்த்தம் அது. அதன்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. Hotel de l'Aveyron க்கு முன்னால் (இன்றும் அது உள்ளது) எடுக்கப்பட்டது. பரிசின் வீதியில் படகுச் சவாரி!! 
 
 
03: Moulin Rouge. இதற்கு அறிமுகமே தேவையில்லை. 18 ஆம் வட்டாரத்தில் உள்ள கலை அரங்கு. இப்புகைப்படம் எடுக்கப்பட்ட ஆண்டு தெரியவில்லை. ஆனால் நூறு வருடங்களுக்கு குறையாமல் இருக்கலாம். 
 
 
04: இப்புகைப்படத்துக்கும் வயது நூறுதான். 18 ஆம் வட்டாரத்தில் உள்ள Rue Saint Vincent வீதி! 
 
 
05: 1900 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் இது. Rue des Blancs Manteaux வீதியில் உள்ள ஒரு உணவகம். வாடிக்கையாளர்களை எதிர்பார்த்தபடி ஒரு ஊழியர்...
 
 
06: Eugène Atget எனும் புகழ்பெற்ற புகைப்படக்கலைஞரால் 1930 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் இது. Rue Asselin வீதியில் உள்ள தனது இருப்பிடத்தின் வாசலில் காத்திருக்கும் ஒரு விலை மாது. 
 
 
07:  புகைப்படக்கலைஞர் Maurice Bucquet எடுத்திருந்த இந்த புகைப்படத்தில், இரண்டு பரிசிய பெண்கள் ரகசியம் கதைக்கின்றனர். 1900 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது இந்த புகைப்படம். 
 
 
08: இந்த புகைப்படத்தை பார்த்தாலே இலகுவில் கண்டுபிடித்துவிடலாம். தற்போது ஒன்றும் அத்தனை பெரிய மாற்றத்தை கொண்டுவிடவில்லை. Avenue de l'Opéra. 1925 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம். அந்த மகிழுந்தை கவனித்தீர்களா??
 
 
09: Gallerie de Bac முன்பாக பூக்கள் விற்பனை செய்யும் பெண். வாடிக்கையாளர்களை எதிர்பார்த்து பூக்களுடன் சேர்ந்து அப்பெண்ணும் வாடுகிறார். 
 
 
10: ஆறாம் வட்டாரத்தின் Place Saint-Germain des Prés இல் உள்ள Les Deux Magots உணவகம். வாடிக்கையாளர்களுக்கு சுவையான உணவை வழங்கும் ஊழியர் ஒருவர். 
 
 
'கலெக்‌ஷன் சும்மா அள்ளுது' பாஸ் என நீங்கள் முணுமுணுப்பது புரிகிறது. நண்பர்களோடு பகிரலாமே!! 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்