விடுதலையின் 80 ஆவது ஆண்டு : Strasbourg பயணமாகிறார் ஜனதிபதி மக்ரோன்!
22 கார்த்திகை 2024 வெள்ளி 17:35 | பார்வைகள் : 698
ஸ்ரார்ஸ்பேர்க் விடுதலை “ Libération de Strasbourg” இன் 80 ஆவது ஆண்டு நினைவு நாளை ஒட்டி, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் Strasbourg நகருக்கு நாளை நவம்பர் 23, சனிக்கிழமை பயணமாக உள்ளார்.
இரண்டாம் உலகப்போரின் போது நாஸிப்படையினர் ஜெர்மனியைப் போல ஐரோப்பாவின் பல நாடுகளில் சித்திரவதை முகாம்கள் அமைத்திருந்தனர். பிரான்சில் ஒரே ஒரு வதை முகாம் Strasbourg நகரில் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு 1941 ஆம் ஆண்டில் இருந்து 1944 ஆம் ஆண்டு வரையான மூன்று ஆண்டுகளில் 52,000 பேர் சித்திரவதை அனுபவித்தும்/ கொல்லப்பட்டும் இருந்ததாக வரலாறு குறிப்பிடுகிறது.
பின்னர் உலகப்போர் நிறைவடைந்து, அந்த வதை முகாமும் அழிக்கப்பட்டது. அதன் 80 ஆவது ஆண்டு நினைவாக கொல்லப்பட்ட ஐரோப்பிய மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அங்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.