Euromillions : €208 மில்லியன் பரிசுத்தொகை!

23 கார்த்திகை 2024 சனி 07:00 | பார்வைகள் : 5263
நவம்பர் 22, நேற்று வெள்ளிக்கிழமை யூரோமில்லியன் சீட்டிழுப்பு இடம்பெற்றது. 189 மில்லியன் யூரோக்கள் பணத்தொகைக்காக இடம்பெற்ற இந்த சீட்டிழுப்பினை எவரும் வெற்றி கொள்ளவில்லை. அதை அடுத்து, வரும் செவ்வாய்க்கிழமை 208 மில்லியன் யூரோக்கள் எனும் பெரும் தொகை சீட்டுழுக்கப்பட உள்ளது.
நேற்றைய சீட்டிழுப்பில் வெற்றி இலக்கமாக 10-11-12-29-31 ஆகிய ஐந்து இலக்கங்களும், நட்சத்திர இலக்களாக 8 மற்றும் 11 ஆகிய இலக்கங்களும் கொண்டிருக்கவேண்டும். ஆனால் அதனை எவரும் பெற்றுக்கொள்ளவில்லை என்பதால், அடுத்த சுற்று சீட்டிழுப்புக்காக மேலும் 19 மில்லியன் யூரோக்கள் அதிகரிக்கப்பட்டு 208 மில்லியன் யூரோக்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 26, செவ்வாய்க்கிழமை அடுத்தகட்ட சீட்டிழுப்பு இடம்பெற உள்ளது. எவ்வாறாயினும் இது யூரோமில்லியனின் அதிகபட்ச தொகை இல்லை என்பதும், கடந்த 2022 ஆம் ஆண்டில் பிரித்தானியர் ஒருவர் 2302 மில்லியன் யூரோக்கள் வென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
●●●
(சூதாட்டம் மற்றும் ’வாய்ப்பு’ விளையாட்டுக்கள் ஆபத்தானவை. இதில் பண இழப்பு, அடிமையாகுதல் போன்ற தீங்கு ஏற்படும். மேலதிக ஆலோசனைகளுக்கு அழைக்கவும் 09 74 75 13 13)