Paristamil Navigation Paristamil advert login

குடியேற்றங்களை விரும்பாத பிரெஞ்சு மக்கள்! - ஆய்வில் தெரியவந்த அதிர்ச்சி முடிவு!!

குடியேற்றங்களை விரும்பாத பிரெஞ்சு மக்கள்! - ஆய்வில் தெரியவந்த அதிர்ச்சி முடிவு!!

23 கார்த்திகை 2024 சனி 07:46 | பார்வைகள் : 2262


சட்டவிரோதமாகவோ, சட்டபூர்வமாகவோ குடியேற்றங்களை விரும்பவில்லை என கிட்டத்தட்ட இரண்டில் ஒரு பிரெஞ்சு மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

CNEWS மற்றும் Euope 1 ஆகிய ஊடகங்களுக்காக CSA நிறுவனம் கருத்துக்கணிப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தது. அதில் “நீங்கள் பிரான்சில் எவ்வித சட்டவிரோதமாகவோ, சட்டபூர்வமாகவோ குடியேற்றத்துக்கு எதிராக இருக்கின்றீர்களா..?” என கேட்கப்பட்ட கேள்விக்கு, 48% சதவீதமாக மக்கள் “குடியேற்றத்துக்கு எதிராக இருக்கிறேன்” எனவும், 51% சதவீதமானவர்கள் “குடியேற்றத்துக்கு ஆதரவாக இருக்கிறேன்” எனவும், 1% சதவீதமானவர்கள் கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். 

இதேபோன்ற ஒரு கருத்துக்கணிப்பு 2021 ஆம் ஆண்டு மேற்கொண்டிருந்த போது 59% சதவீதமானவர்கள் குடியேற்றத்தை விரும்பவில்லை என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது குறைவடைந்து மக்கள் மனங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்