Paristamil Navigation Paristamil advert login

கின்னஸ் புத்தகத்தில் ஒரு பிரெஞ்சு பாலம்!!

கின்னஸ் புத்தகத்தில் ஒரு பிரெஞ்சு பாலம்!!

12 பங்குனி 2019 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 17886


இந்த பாலம் திறந்து வைக்கப்ப்ட்டபோது, உலகத்தொலைக்காட்சி, செய்திதாள்களில் எல்லாம் இதுதான் தலைப்புச் செய்தி. 
 
கின்னஸ் சாதனையை கைப்பற்றியது இந்த பாலம். .
 
பாலம் திறக்கப்பட்டபோது, உலகின் மிக உயரமான பாலமாக இது அறிவிக்கப்பட்டது. 
 
உலகின் மிக உயரமான தூணாக (pylons) P2 தூணும் (803 அடி உயரம்) P3 தூணும் 725 அடி உயரம்) பதிவானது. இதற்கு முன்னர் ஜெர்மனியில் கட்டப்பட்ட Kochertal Viaduct மேம்பாலத்தின் தூணாக 463 அடி உயரத்தூணே சாதனையாக இருந்தது. 
 
இந்த பாலத்தில் உங்களது மகிழுந்து செல்லவேண்டும் என்றால் இரண்டே இரண்டு கண்டிஷன் தான். 
 
 
ஒன்று உங்களது வாகனம் மணிக்கு 110 கி.மீ வேகத்தில் பறக்கவேண்டும். நின்று நிதானமாக போட்டோ எடுத்து.. நோ நோ..!!
 
இரண்டாவது நீங்கள் ஒவ்வொரு பயணத்துக்கும் €8.30 கள் கட்டணம் செலுத்தவேண்டும். இது சாதாரண நாட்களில். அதுவே ஜூன் 15 தொடக்கம் செப்டம்பர் 15 காலப்பகுதிக்குள் நீங்கள் பயணிக்க நேர்ந்தால் €10.40 க்கள் கட்டணமாக செலுத்தவேண்டும். 
 
இன்று இந்த சாதனைகள் முறியடிக்கப்பட்டாலும், அதன் தரத்துக்கும் மனிதவளத்தை குறைத்து, தொழில்நுட்பத்தை திறமையாக பயன்படுத்தி, இந்த வானைத்தொடும் பாலத்தை அமைத்த இந்த சாதனை மனிதகுலம் இருக்கும் வரை போற்றப்படும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்