Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் பொலிஸார் மேற்கொண்ட  துப்பாக்கிச் சூடு - சிறுவன் பலி

 கனடாவில் பொலிஸார் மேற்கொண்ட  துப்பாக்கிச் சூடு - சிறுவன் பலி

23 கார்த்திகை 2024 சனி 09:34 | பார்வைகள் : 3369


கனடாவின் வின்னிபெக் வடக்கு மானிடோபா பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். 

ஆயுதத்துடன் இருந்த சிறுவனே, பொலிஸார் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளான்.

சம்பவத்தில் காயமடைந்த 17 வயது சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளான்.

கூரிய ஆயுதமொன்றுடன் மக்களுக்கு தீங்கிழைக்கும் வகையில் செயற்பட்ட சிறுவனை சுட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 


 

வர்த்தக‌ விளம்பரங்கள்