அட்லியின் அடுத்த படத்தின் ஹீரோ யார்?

23 கார்த்திகை 2024 சனி 10:15 | பார்வைகள் : 3228
அட்லியின் அடுத்த படத்தில் கமல்ஹாசன் அல்லது ரஜினிகாந்த் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும், பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் கடந்த சில வாரங்களாக செய்திகள் வெளிவந்தன. தற்போது இந்த தகவல் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக கூறப்படுவது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"ராஜா ராணி" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லி, அதன் பின்னர் தளபதி விஜய் நடித்த "தெறி", "மெர்சல்", "பிகில்" போன்ற மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். பாலிவுட்டில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடித்த ‘ஜவான்’ படத்தை இயக்கிய நிலையில் இந்த படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அட்லியின் அடுத்த படத்தில் சல்மான் கான் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது ஒரு பீரியட் மற்றும் நிகழ்காலம் அடங்கிய கதையம்சம் கொண்ட படம் என கூறப்படுகிறது. இந்த படத்தில் இரண்டு ஹீரோக்கள் இருப்பார்கள் என்றும், ஒருவர் சல்மான் கான் என்றும், இன்னொருவர் கமல் அல்லது ரஜினிகாந்த் இருவரில் ஒருவர் நடிக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
இந்த படத்தை தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாம். அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.-