பாராளுமன்ற உறுப்பினரின் டெலிகிராம் கணக்கு திருடப்பட்டது.. விசாரணைகள் ஆரம்பம்!
23 கார்த்திகை 2024 சனி 10:38 | பார்வைகள் : 376
பெயர் குறிப்பிடப்படாத பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரது டெலிகிராம் கணக்கு ‘ஹாக்’ (Hack) செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெலிகிராமில் வந்த இணைப்பு ஒன்றை அழுத்தியதால் கணக்கில் இருந்த பல முக்கிய தரவுகளும், புகைப்படங்களும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. “அந்த இணைப்பு வேறொரு இணையத்தளத்துக்கு கூட்டிச் செல்லவில்லை. மாறாக டெலிகிராம் செயலிக்குள்ளாகவே ஒரு ‘வசதி’ போன்று மாறியது. எனவே அதனை நான் நம்பினேன்!” என பாதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இச்சம்பவத்தை அடுத்து பரிஸ் வழக்கறிஞர் அலுவலகத்தின் உட்பிரிவான l'Office anti-cybercriminalité குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.