கின்னஸ் புத்தகத்தில் ஒரு பிரெஞ்சு பாலம்!!
11 பங்குனி 2019 திங்கள் 10:30 | பார்வைகள் : 18007
முன் எப்போதும் பயன்படுத்தப்படாத புதிய தொழில்நுட்பம் ஒன்று இதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது.
அதாவது தனக்கான பாலத்தை தானே உருவாக்கிக்கொள்ளும்.
இது கேட்பதற்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் அது ஒன்றும் அத்தனை ஆச்சரியம் இல்லை. தொடரூந்து தண்டவாளமே இங்கு அப்படித்தான் அமைக்கப்படுகின்றது.
பாலம் விஷயத்துக்கு வருவோம். பாலம் அமைக்கப்படவேண்டிய இரு முனைகளிலும் இருந்து அதன் நடுப்பகுதியை நோக்கி கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
இராட்ச அளவு கொண்ட கொன்கிரீட் துண்டுகளை, இதற்கென அமைக்கப்பட்ட பிரத்யேக தொழில்நுட்ப இயந்திரம் தானாகவே இணைக்கவும், அதனை சரியாக உயரத்துக்கு உயர்த்தவும் வல்லமை கொண்டது.
செப்டம்பர் 2002 இல் ஆரம்பித்த இந்த பணிகள், அடுத்த மூன்று மாதங்களில், கரையில் இருந்து முதலாவது தூணுக்கு இடையிலான பாதையை (piers) அமைத்தார்கள்.
அடுத்த ஒருவருடத்துக்குள்ளாக (செப்டம்பர் 2003) முழு பாதையையும் அமைத்து பாலத்த்தை இணைத்தார்கள்.
இரு கரையில் இருந்து பாலம் கட்டுப்பட்டு வந்து நடும் ஒன்றோடு ஒன்று இணையும் இறுதித்தருவாயில்,
இரண்டு தூண்களுக்கும் இடையில் சாம்பெயின் போத்தல் ஒன்று வைக்கப்பட்டது.
இயந்திரம் இயங்க, சடார் என்ற சத்தத்தோடு சாம்பெயின் போத்தலை உடைத்துக்கொண்டு இரண்டு பகுதியும் ஒன்றோடு ஒன்று இணைந்தது. முழு பாலம் உருவானது.
அந்த சந்தோசத்தை கொண்டாட, நடுவில் பிரெஞ்சு கொடி பறக்கவிட்டு தெறிக்கவிட்டார்கள்.
இந்த சாதனையோடு கின்னஸ் புத்தகத்தில் ஒரு பக்கத்தை துடைத்து, தூசு தட்டி ரெடியாக வைத்திருந்தார்கள்.
பின்னர் மளமளவென பாலத்தில் வீதிகள் அமைக்கும் பணி, கார்பெட், தூண்களுக்கிடையேயான கம்பிகள், மின் விளக்குகள் என சரமாரியாக வேலை இடம்பெற்றது.
ஜனவரி 10, 2005 ஆம் ஆண்டு பாலத்தை திறந்து வைப்பதாக முன்னர் முடிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் டிசம்பர் 14, 2004 ஆம் ஆண்டே அனைத்து பணிகளும் நிறைவடைந்துவிட்டதால், இரண்டு நாட்கள் கழித்து 16, டிசம்பர் 2004 ஆம் ஆண்டு இந்த பாலத்தை திறந்து வைத்தார்கள்.
சாதனைப்பட்டியல் தயாரானது.