பாலியல் சுற்றுலாத் தலமாக மாறிய நகரம்....
23 கார்த்திகை 2024 சனி 15:07 | பார்வைகள் : 390
பாங்காக், ஹாங்காங், தாய்லாந்து போன்ற நாடுகளில் பெண்களின் பாலியல் தொழிலிலை பிரத்யேக வழிவகை செய்து தரப்பட்டு உள்ளது.
ஆனால் தொழில் துறையிலும் சரி , கல்வி ,வேலை ,ஆராய்ச்சி உள்ளிட்டவற்றில் முன்னணி நாடக உள்ள ஜப்பானில் முக்கிய நகரம் ஒன்று பாலியல் சுற்றுலாத் தலமாக மாறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதிகமாகச் சம்பாதிக்கும் ஜப்பானிய ஆண்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளைச் சேர்ந்த பெண்களுடன் திருமணத்திற்குப் புறம்பான உறவுகளைக் கொண்டிருந்தனர்.
தற்பொழுது ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ஆண்களை ஈர்க்கும் வகையில், டோக்கியோ இப்போது பாலியல் சுற்றுலாவுக்கான இடமாக மாறியுள்ளது.
இது குறித்து ஜப்பான் Ciboren பொதுச் செயலாளர் யோஷிஹிட் தனகா கூறுகையில் , சமீப காலங்களில் டோக்கியோவின் கபுகிச்சோ மாவட்டத்தில் பாலியல் தொழில் வேகமாக அதிகரித்து வருகிறது.
தற்பொழுது ஜப்பான் ஒரு ஏழை நாடாக மாறிவிட்டது ன் தொற்றுநோயைத் தொடர்ந்து பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் காரணமாக வெளிநாட்டினரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் சீனர்கள் தான் .
இதனால் இருபது வயதிற்குட்பட்ட பதின்ம வயதினரும் பெண்களும் உயிர்வாழ்வதற்காக பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படுகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.