Paristamil Navigation Paristamil advert login

Val-d'Oise : வீடொன்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!!

Val-d'Oise : வீடொன்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!!

23 கார்த்திகை 2024 சனி 19:36 | பார்வைகள் : 5490


நவம்பர் 22, வெள்ளிக்கிழமை Magny-en-Vexin (Val-d'Oise) நகரில் உள்ள வீடொன்றில் இருந்து பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

Rue Molière வீதிக்கு தீயணைப்பு படையினர் காலை 7 மணி அளவில் அழைக்கப்பட்டனர். அங்கு உடம்பில் வெட்டுக்காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் பெண் ஒருவரது சடலம் கிடப்பதை பார்த்துள்ளனர். குறித்த பெண் 80 வயதுடையவர் எனவும், அவர் கொல்லப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டு, அது தொடர்பில் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிலையில், சம்பவ இடத்தில் இருந்த கொல்லப்பட்ட பெண்ணின் 30 வயதுடைய மகளிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், அவர் கைதும் செய்யப்பட்டார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்