கின்னஸ் புத்தகத்தில் ஒரு பிரெஞ்சு பாலம்!!
10 பங்குனி 2019 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 17963
105.2 அடி அகலம் கொண்ட இந்த பாலம் 8,070 அடி நீளம் கொண்டது. அதாவது இரண்டரை கி.மீ தூரம்.
A75 நெடுஞ்சாலையில் இருந்து உயரம் கூடவோ, குறையவோ இல்லை. அதே உயரத்தை தக்கவைத்துக்கொண்டு மேம்பாலத்தை கட்டிமுடிப்பதென்பது நினைத்து பார்க்கவே வியப்பை கொண்டுவரும்.
€394,000,000 யூரோக்கள் செலவில் (அந்த தொகையை நீங்களே கணக்கு கூட்டிக்கொள்ளுங்கள்) இந்த கடுமானப்பணி ஒக்டோபர் 16, 2001 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
பாலம் கட்டுமானப்பணிகளில் மற்றுமொரு சவால் இருந்தது. அது அப்பிராந்தியத்தை குறுக்கறுத்து ஓடிய Tarn நதி. மேம்பாலம் இந்த நதியை கடந்து தான் செல்லப்போகின்றது.
பாலத்தை தாக்கும் தூண்கள் (pylon) அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. முதலில் அத்திவாரத்துக்கான குழி தோண்டப்பட்டது. அதுவே ஒவ்வொன்றும் 15 மீற்றர் ஆழமும், 5 சதுர மீற்றர் பரப்பளவும் கொண்டது. ஒரு ஆகாயக்கல் விழுந்து ஏற்பட்ட பள்ளம் போன்று அதுவே மிகப்பெரிய இராட்சத தனமாக இருக்கும்.
பின்னர் சிமெந்து கொட்டி கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. மூன்றில் இருந்து ஐந்து சுற்று மீற்றர் விட்டம் கொண்டது ஒவ்வொரு தூணும்.
2002 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கட்டுமானப்பணிகள் புலிப்பாய்ச்சல் போல் வேகமெடுத்தது. ஒவ்வொரு மூன்று நாளுக்கும் 4 மீற்றர் (13 அடி) உயரத்துக்கு தூண் எழுந்தது.
மொத்தமான எட்டு தூண்கள், அவைக்கு துணையாக எட்டு தற்காலிக தூண்கள். இவை அனைத்தும் அவ்வருடத்தின் ஜூன் மாதத்துக்குள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது.
சரி.. இதன்பிறகு தான் துண்களை இணைத்து மேலே பாலம் கட்டவேண்டும். அதாவது பாதை அமைக்கவேண்டும்.
இத்தனை பெரிய பள்ளத்தாக்கில், ஆகாயம் அளவு உயரத்தில் ஒவ்வொரு தூண்களுக்கும் இடையே ஒன்றொன்றாக சிமெந்து போட்டு பாலம் கட்டுவது எப்படி சாத்தியம்???
நாளை பார்க்கலாம்..!!