Paristamil Navigation Paristamil advert login

பிக் பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் இவரா?

பிக் பாஸில் இருந்து இந்த வாரம்  வெளியேறிய  போட்டியாளர் இவரா?

24 கார்த்திகை 2024 ஞாயிறு 08:17 | பார்வைகள் : 145


பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க கடந்த அக்டோபர் மாதம் 6-ந் தேதி கோலாகலமாக தொடங்கியது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா ஆகிய ஐந்து பேர் இதுவரை எலிமினேட் ஆகி உள்ளனர். இதுதவிர 6 போட்டியாளர்கள் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்துள்ளதால் தற்போது 19 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக ஆண்கள் ஒரு அணியாகவும், பெண்கள் ஒரு அணியாகவும் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு இடையே போட்டி நடைபெற்று வருகிறது. ஆனால் பிக் பாஸ் குழுவின் இந்த புது பிளான் ஒர்க் அவுட் ஆகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆண்கள் ஒரு அணியாகவும், பெண்கள் ஒரு அணியாக இருப்பது டல் அடிக்கும் வகையில் இருப்பதால் பிக் பாஸே இந்த பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் என்கிற நடைமுறையை கைவிட முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 50 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், வீட்டில் கூட்டம் குறைந்தபாடில்லை. இதனால் இனி வரும் வாரங்களில் டபுள் எவிக்‌ஷன் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இந்த வாரம் ஒரு நபர் மட்டுமே எலிமினேட் ஆகி இருக்கிறார். இந்த வார நாமினேஷனில் மொத்தம் 13 பேர் சிக்கி இருந்தனர். அதில் கம்மியான வாக்குகளை வாங்கி இருந்தது ஷிவகுமார் தான். ஆனால் அவர் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் பெற்றதால் இந்த வாரம் எஸ்கேப் ஆகிவிட்டார

இதற்கு அடுத்தபடியாக டேஞ்சர் ஜோனில் இருந்த போட்டியாளர்கள் என்றால் அது ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, வர்ஷினி வெங்கட் மற்றும் தர்ஷிகா தான். இதில் சாச்சனா கடந்த வாரம் சண்டைக்கோழியாக வலம் வந்ததால் அவர் எலிமினேஷனில் இருந்து கடைசி நேரத்தில் தப்பித்துவிட்டார். இதனால் அவரைவிட கம்மியான ஓட்டுகளை வாங்கிய வைல்டு கார்டு போட்டியாளர் வர்ஷினி வெங்கட் தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் ஆகி இருக்கிறார். இதனால் இந்த வாரம் ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்துள்ளார் சாச்சனா.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்