Paristamil Navigation Paristamil advert login

குட் பேட் அக்லி படத்தில் இருந்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கம்!

குட் பேட் அக்லி படத்தில் இருந்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கம்!

24 கார்த்திகை 2024 ஞாயிறு 08:23 | பார்வைகள் : 156


தெலுங்கு திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தேவி ஸ்ரீ பிரசாத். இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா படத்திற்காக தேசிய விருதும் வென்றிருந்தார். புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்திற்கும் இசையமைப்பாளராக கமிட்டாகி இருந்த தேவி ஸ்ரீ பிரசாத், ஒரு கட்டத்தில் படக்குழுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாதியிலேயே விலகினார். இதனால் அவருக்கு பதில் தமன் மற்றும் சாம் சிஎஸ் ஆகியோரை வைத்து பின்னணி இசை பணிகளை முடித்து வருகின்றனர்.

தெலுங்கு மட்டுமின்றி தமிழ் திரையுலகில் ஏராளமான சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத். இவர் இசையில் சமீபத்தில் கங்குவா திரைப்படம் திரைக்கு வந்தது. அப்படத்தில் பின்னணி இசை அதிக சத்தத்துடன் இருப்பதாக புகார் எழுந்தது. அப்படத்தின் தோல்விக்கு அதுவும் ஒரு காரணமாக கூறப்பட்டது. கங்குவா படத்தின் தோல்விக்கு பின் தேவி ஸ்ரீ பிரசாத் தமிழில் இசையமைத்து வந்த குட் பேட் அக்லி பட வாய்ப்பு அவரை விட்டு நழுவி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது

குட் பேட் அக்லி படத்தில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் விலகிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவருக்கு பதில் அனிருத்தை வைத்து எஞ்சியுள்ள பணிகளை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அவர் படத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு அவர் பாடல்களை காப்பியடித்ததும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த வால்டர் வீரய்யா படத்திற்காக அவர் இசையமைத்து ஹிட்டான பாடல் பொனகாலு லோடிங்.

இந்த பாடலை தமிழில் குட் பேட் அக்லி படத்துக்காக சம்பவம் தான் லோடிங் என்கிற பெயரில் அப்படியே காப்பி அடித்து லிரிக்ஸை மட்டும் மாற்றி ரெடி பண்ணி கொடுத்திருக்கிறார். இதனால் அதிருப்தி அடைந்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதுதான் உண்மை காரணமா இல்லை வேறு ஏதேனும் பிரச்சனையா என்பது படக்குழு விளக்கம் அளித்தால் தான் தெரியவரும். குட் பேட் அக்லி படத்திற்கு இசையமைக்க அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். அவர் இருக்கும் பிசி ஷெட்யூலில் ஓகே சொல்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்