Paristamil Navigation Paristamil advert login

கின்னஸ் புத்தகத்தில் ஒரு பிரெஞ்சு பாலம்!!

கின்னஸ் புத்தகத்தில் ஒரு பிரெஞ்சு பாலம்!!

9 பங்குனி 2019 சனி 10:30 | பார்வைகள் : 18307


பரிசில் இருந்து தெற்கு பிரான்ஸின் Béziers நகரம் வரை நீள்கிறது A75 நெடுஞ்சாலை. இந்த நெடுஞ்சாலையின் ஒரு அங்கமாக ஒரு மேம்பாலம் உள்ளது. 
 
le Viaduc de Millau என அழைக்கப்டும் (ஆங்கிலத்தில் Millau Viaduct) இந்த பாலம் ஒரு கின்னஸ் சாதனை படைத்த பாலம். ஏன் என்றால், அந்த பாலமே ஒரு இமாலய சிந்தனை தான். 
 
இந்த மேம்பாலம் 1,125 அடி உயரம் கொண்டது. அதாவது 343  மீற்றர்கள். ஆம்.. ஈஃபிள் கோபுரத்தை காட்டிலும் உயரம் தான். உலகிலேயே உயரமான மேம்பாலமாக இந்து கின்னஸ் சாதனையை தட்டிச் சென்றது. 
 
Sir Norman Foster எனும் பிரித்தானிய கட்டுமானியும் Dr Michel Virlogeux எனும் பிரெஞ்சு கட்டுமானியும் சேர்ந்து படைத்த அற்புதம் இது. 
 
Aveyron மாவட்டத்தில் உள்ள Millau எனும் பகுதியையும் அதே மாவட்டத்தில் உள்ள Creissels பகுதியையும் இந்த மேம்பாலம் தொடுகின்றது என்றபோதும், அது A75 நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மாத்திரமே. இந்த நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது திடீரென இந்த பாலம் தோன்றி மறையும். 
 
மேம்பாலத்தின் கட்டுமானப்பணிகள் முழுக்க முழுக்க இயந்திரங்களை கொண்டு இரண்டு பகுதிகளிலும் இருந்து கட்ட ஆரம்பித்து, நடுவில் கொண்டுவந்து இணைத்தார்கள். பாலம் தரையில் இருந்து
1,125 அடி உயரத்தில் இருக்கின்றது. இதில் எங்கே இருந்து கட்டுமாமானப்பணிகளை மேற்கொள்ளுவது. பாலம் கட்டி, அதில் நின்றுகொண்டு தான் பாலத்தை தொடர்ந்து கட்டமுடியும். 
இந்த பாலம் நேரான திசையில் தான் கட்டப்பட்டுக்கொண்டு வருகின்றதா என்பதையே GPS மூலம் தான் கணிக்க முடியும். இதில் சிக்கல் என்னவென்றால் பாலம் வடிவமைக்கும் போதே இதில் ஒரு ஒரு மெல்லிய வளைவு கொண்டிக்குமாறு வடிவமைக்கப்பட்டது. அதை எப்படி GPS இல் கணிப்பது...??! அது தான் மனிதனின் மூளை. 
 
நாளை!!
 
 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்