Paristamil Navigation Paristamil advert login

 பிரித்தானியாவின் அணு ஆயுத தளங்கள் மீது  மர்ம ட்ரோன்கள்

 பிரித்தானியாவின் அணு ஆயுத தளங்கள் மீது  மர்ம ட்ரோன்கள்

24 கார்த்திகை 2024 ஞாயிறு 09:04 | பார்வைகள் : 425


பிரித்தானியாவின் மூன்று அணு ஆயுத தளங்கள் மீது திடீரென்று மர்ம ட்ரோன்கள் பறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த தளங்களில் ஒன்றில் அணு ஆயுதங்களும் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்ற தகவலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த ட்ரோன்கள் எதிரிகளால் இயக்கப்பட்டுள்ளதா என்பதில் உறுதியான தகவல் இல்லை.

ஆனால் நவம்பர் 20 மற்றும் 22ம் திகதிக்குள் அங்குள்ள பிரித்தானிய மற்றும் அமெரிக்க இராணுவத்தினர் ஒரு பதட்டமான சூழலில் இருந்தபோது இந்த மர்ம ட்ரோன்கள் வட்டமிட்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் பிரித்தானிய ஏவுகணைகளை முதல் முறையாக உக்ரைன் ரஷ்யாவுக்கு எதிராக பயன்படுத்தியதை அடுத்து பிரித்தானியாவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்திருந்தார் ஜனாதிபதி புடின்.

அத்துடன், ரஷ்யாவின் அணு ஆயுத பயன்பாடு தொடர்பிலான விதிகளையும் அவர் புதுப்பித்துள்ளார். 

3சசபிரித்தானியா மீது நேரிடையாக ஏவுகணை தாக்குதலை ரஷ்யா முன்னெடுக்கும் என்றால், ரஷ்யாவின் முதன்மையான இலக்கு RAF Lakenheath தளமாக இருக்கலாம் என்றே ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளது.

இங்கேயே அமெரிக்க அணு ஆயுத ஏவுகணைகள் பாதுகாக்கும் திட்டமுள்ளதாக கூறப்படுகிறது. 

இதனால் போர் விமானங்கள் இங்கிருந்து எப்போதும் வந்து செல்லும். மட்டுமின்றி, ஹிரோஷிமா அணுகுண்டை விடவும் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் இங்கே பாதுகாக்கப்படுகிறது.

ஐரோப்பாவில் இருந்து எந்த அமெரிக்க அல்லது நேட்டோ இராணுவ நடவடிக்கைகளுக்கும் இந்த தளம் முதன்மையானதாக பார்க்கப்படுகிறது. 

மேலும், மர்ம ட்ரோன்களை F-15E விமானங்கள் துரத்திச் சென்றதாகவும் உறுதி செய்யப்படாத தகவல் கசிந்துள்ளது.

ஆனால் அமெரிக்க இராணுவ தரப்பில் இருந்து இது தொடர்பில் தகவல் ஏதும் வெளியாகவில்லை. 

மர்ம ட்ரோன்கள் விரோதிகளால் இயக்கப்பட்டதா என்பது தொடர்பிலும் இந்த கட்டத்தில் உறுதி செய்யப்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்