Paristamil Navigation Paristamil advert login

▶ Uber Eats செயலியூடாக நூதன முறையில் €2.4 மில்லியன் மோசடி! - இருவர் கைது!!

▶ Uber Eats செயலியூடாக நூதன முறையில் €2.4 மில்லியன் மோசடி! - இருவர் கைது!!

24 கார்த்திகை 2024 ஞாயிறு 10:19 | பார்வைகள் : 475


அமெரிக்காவின் பிரபல உணவு விநியோக நிறுவனமான Uber Eats இன் தொலைபேசி செயலியூடாக நூதமான முறையில் மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரு நபர்கள் இணைந்து டெலிகிராம் செயலியில் Fast Eats எனும் ஒரு கணக்கை ஆரம்பித்து, அவர்களூடாக உணவினை பதிவு செய்யும் போது அதன் உண்மையான விலையில் இருந்து 50% சதவீதத்தை விலைக்கழிவாக பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளனர்.

பணம் பெறப்பட்டவுடன், Uber Eats நிறுவனத்தில், ஒவ்வொரு முறையும் புதிய கணக்கு ஒன்றின் மூலம் உணவை முன்பதிவு செய்து, அது விநியோகிக்கப்பட்டவுடன், அதனை இரத்துச் செய்து, 100% வீத தொகையை மீளப்பெற்றுள்ளனர்.

Uber Eats நிறுவனத்தில் ஒவ்வொரு புதிய கணக்கிற்கும் 100% சதவீத பணத்தை மீள பெற முடியும் எனும் வசதியை பயன்படுத்தி, ஏராளமான போலிக்கணக்குகளூடாக இந்த தொகையை அவர்கள் மோசடி செய்துள்ளனர்.

டெலிகிராம் செயலியில் உள்ள bot தானியங்கி வசதி மூலம் மொத்தமாக 137,000 போலி கணக்குகளை உருவாக்கி 2.4 மில்லியன் யூரோக்கள் வரை மோசடி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saint-Nazaire (Loire-Atlantique) நகரைச் சேர்ந்த ஒருவரும், Nanterre (Hauts-de-Seine) நகரைச் சேர்ந்த ஒருவரும் இணைந்து இந்த மோசடியை மேற்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்