Paristamil Navigation Paristamil advert login

வானிலை : நாடு முழுவதும் மழை.. 5 மாவட்டங்களுக்கு வெள்ள அனர்த்த எச்சரிக்கை!

வானிலை : நாடு முழுவதும் மழை.. 5 மாவட்டங்களுக்கு வெள்ள அனர்த்த எச்சரிக்கை!

24 கார்த்திகை 2024 ஞாயிறு 18:09 | பார்வைகள் : 4345


நாளை நவம்பர் 25, திங்கட்கிழமை நாடு முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது. ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அனர்த்த எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Manche, Calvados, Orne, Aisne மற்றும் Ardennes ஆகிய ஐந்து மாவட்டங்களின் கொட்டித்தீர்க்கும் மழையினால் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கலாம் என தெரிவிக்கப்பட்டு அங்கு குறைந்தபட்ச எச்சரிக்கையான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தலைநகர் பரிசில் நண்பகலின் பின்னர் 12°C வரையான குளிர் நிலவும் எனவும் Auxerre நகரில் 11°C வரை குளிர் நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்