Café de Flore - சில அடடா தகவல்கள்!!

5 பங்குனி 2019 செவ்வாய் 11:30 | பார்வைகள் : 20124
பரிசில் நன்கு அறியப்பட்ட, உங்களுக்கெல்லாம் பரீட்ச்சையமான ஒரு கஃபே கடை பற்றி இன்றைய பிரெஞ்சு புதினத்தில் பார்க்கலாம்!!

Café de Flore!
பரிஸ் ஆறாம் வட்டாரத்தில் உள்ள இந்த அருந்தகம், பிரான்சின் மிக பழமையான அருந்தகங்களில் ஒன்று.
மூன்றாம் குடியரசின் காலத்தில், 1880 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது இந்த அருந்தகம்.
பழைய புராணக்கதைகளில் வந்த Flora எனும் கதாப்பாத்திரத்தின் பாதிப்பில் இந்த பெயர் இந்த அருந்தகத்துக்கு சூட்டப்பட்டது.
இந்த அருந்தகம் மிக புகழ்பெற்றதற்கு மற்றுமொரு காரணம் உண்டு. பிரான்சில் வசித்த 'பெரும் தலைகள்' எல்லோருக்கும் மிக பிடித்தமான அருந்தகம் இது.
Georges Bataille, Robert Desnos, Léon-Paul Fargue, Raymond Queneau ஆகிய எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், தத்துவவாதிகள் என பலர் இங்கு தொடர்ச்சியாக படையெடுத்தனர்.
அட, நம்ம பாப்லோ பிக்காசோவே இங்கு வாடிக்கையாளர்.
இவர்கள் தங்கள் எழுத்துக்களில் ஓவியங்களில் எல்லாம் இந்த அருந்தகத்தை கொண்டுவந்தார்கள். பல காதல் கதைகளில் மிகப்பெரிய 'ரொமான்ஸ்' காட்சிகள் எல்லாம் இந்த அருந்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
1963 ஆம் ஆண்டு வெளியான <<Le feu follet>> எனும் திரைப்படத்தில் ஒரு காட்சியில் இந்த கஃபே வரும்.
"Égal" எனும் Amanda Lear இன் காணொளி பாடலில் கூட இந்த அருந்தகம் சில காட்சிகளில் வரும்.
இன்றும்கூட, பல அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்களை இங்கு காணலாம்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
2