Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் தோனியுடன் விளையாட காத்திருக்கிறேன் - அஸ்வின் உருக்கம்

மீண்டும் தோனியுடன் விளையாட காத்திருக்கிறேன் - அஸ்வின் உருக்கம்

25 கார்த்திகை 2024 திங்கள் 07:25 | பார்வைகள் : 3055


ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் CSK அணிக்கு செல்வதில் மகிழ்ச்சி அடைவதாக உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். 

2025 ஐபிஎல் ஏலம் நேற்று தொடங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரவிச்சந்திரன் அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு எடுத்தது.

இதன்மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட உள்ளார். 

மீண்டும் சென்னை அணியில் இணைய உள்ளது குறித்து அஸ்வின் உருக்கத்துடன் பேசிய வீடியோவை CSK எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.  

அதில், "வாழ்க்கை ஒரு வட்டம் என சிலர் சொல்வார்கள். சென்னை அணிக்காக கடந்த 2008 முதல் 2015 வரை விளையாடியதுதான் எனது கிரிக்கெட் பயணத்திற்கு உதவியாக இருந்தது.

2011யில் ஏலத்தில் எடுக்க போட்டி போட்டதுபோல தற்போதும் நிர்வாகம் செயல்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு CSKவுக்கு விளையாடுவது பெருமையாக உள்ளது. தோனி மற்றும் ருதுராஜ் உடன் இணைந்து விளையாட காத்திருக்கிறேன்" என தெரிவித்துள்ளார். 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்