Paristamil Navigation Paristamil advert login

 நெதன்யாகு குறித்து ஈரான் தலைவர் ஆவேசம்

 நெதன்யாகு குறித்து ஈரான் தலைவர் ஆவேசம்

26 கார்த்திகை 2024 செவ்வாய் 10:02 | பார்வைகள் : 5700


இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு வழங்கும் நாடுகளுக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.

இஸ்ரேலிய தலைவர்கள் இருவர் மீதும் மரண தண்டனை விதிக்க வேண்டும், கைதாணை அல்ல என தெரிவித்துள்ளார் ஈரானின் உச்சத்தலைவர் அலி கமேனி.

காஸா மற்றும் லெபனானில் இஸ்ரேலுடன் சண்டையிடும் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா படைகளுக்கு ஈரான் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. 

இந்நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கைதாணை தொடர்பில் அலி கமேனி கருத்து தெரிவித்துள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ஹமாஸ் தலைவர் இப்ராஹிம் அல்-மஸ்ரி ஆகியோருக்கு எதிராக வியாழக்கிழமை கைதாணை வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரம் ஐரோப்பிய நாடுகளில் விவாதப் பொருளாகியுள்ளது. பிரித்தானியாவும் கனடாவும் நெதன்யாகு கைதுக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ரோம் ஒப்பந்தங்களை பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

இந்த நிலையில், கருத்து தெரிவித்துள்ள அலி கமேனி, அவர்களுக்கு கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது போதாது, மரண தண்டனை கட்டயம் அளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

நெதன்யாகு மீதும் அவரது முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மீதும் கைதாணை பிறப்பிக்க போதுமான காரணங்கள் இருப்பதாக குறிப்பிட்ட நீதிபதிகள், கொலை, துன்புறுத்தல் மற்றும் போரின் ஆயுதமாக பட்டினியை உருவாக்கியது உள்ளிட்ட செயல்களுக்கு அவர்கள் மீது கைதாணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் இந்த முடிவு இஸ்ரேலில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது வெட்கக்கேடான செயல் மற்றும் அபத்தமானது என தெரிவித்துள்ளனர். ஆனால், வன்முறையை முடிவுக்கு கொண்டு வரவும், போர்க்குற்றங்களுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும் இது உதவும் என காஸா மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

5 நாள்கள் முன்னர்

நினைவஞ்சலி

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்