சுவிட்சர்லாந்தில் வெடித்த பார்சல் வெடிகுண்டு- குழந்தை காயம்

26 கார்த்திகை 2024 செவ்வாய் 13:48 | பார்வைகள் : 6168
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள, Grange-Canal என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்த தபால் பெட்டி ஒன்றிலிருந்த பார்சல் வெடிகுண்டு ஒன்று வெடித்ததில் ஒரு குழந்தை காயமடைந்துள்ளது.
அந்த குழந்தை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கோடையில், Saint-Jean எனுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கும், இந்த பார்சல் வெடிகுண்டு வெடிப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்..
அந்த குண்டு வெடிப்பிலும் ஒருவர் காயமடைந்தார்.
காயமடைந்த அந்த நபரும் அதே வீட்டில் வாழும் வேறொரு நபரும் ஒரு கைக்கடிகார தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள்.
அவர்கள் வேலை செய்யும் அந்த கைக்கடிகார தயாரிப்பு நிறுவனத்துக்கும் பல வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவங்கள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என பொலிசார் கருதுகிறார்கள்.
5 நாள்கள் முன்னர்
நினைவஞ்சலி

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025