சாள்-து-கோல் : நாய் ஒன்றைத் தேடி ஒருவாரமாக போராட்டம்.. இரண்டு ஓடுபாதைகள் மூடப்பட்டு தீவிர தேடுதல்..!!
26 கார்த்திகை 2024 செவ்வாய் 18:02 | பார்வைகள் : 477
கடந்த ஒரு வாரமாக Roissy-Charles-de-Gaulle விமான நிலையத்தில் பயணி ஒருவரின் வளர்ப்பு நாய் ஒன்றை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. விமான நிலைய ஊழியர்கள், எயார் பிரான்ஸ் நிறுவனத்தினர் என பலர் இணைந்து பல வழிகளில் நாயைத் தேடி வருகின்றனர்.
Amalka எனும் வளர்ப்பு நாய் ஒன்று எயார் பிரான்ஸ் விமானம் ஒன்றில் வந்து இறங்கிய கையோடு, விமானத்தில் இருந்து தப்பி ஓடி மறைந்துள்ளது. அதன் பின்னர் அதனை தேடியும் கிடைக்கவில்லை. நாயின் உரிமையாளர் எயார் பிரான்சை கடுமையாக சாடியதுடன், அவர் மன உளைச்சலில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ட்ரோன் கருவிகள் மூலமாக தேடுதல் மேற்கொண்டும் பலனில்லை. சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, இரவிரவாக நாய் தேடப்பட்டது. விமானநிலையத்தை சூழ உள்ள பகுதிகளில் தேடுதல் வேட்டை இடம்பெற்றது.
இன்று நவம்பர் 26, செவ்வாய்க்கிழமை நண்பகலின் பின்னர் விமான நிலையத்தின் இரண்டு ஓடுபாதைகள் மூடப்பட்டு நாய் தேடப்பட்டது.
ஆனால் குறித்த நாய் கிடைக்கவில்லை.