Paristamil Navigation Paristamil advert login

கத்தி மூலம் அச்சுறுத்தல் விடுத்த ஒருவர் - காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலி!

கத்தி மூலம் அச்சுறுத்தல் விடுத்த ஒருவர் - காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலி!

26 கார்த்திகை 2024 செவ்வாய் 19:23 | பார்வைகள் : 4417


கத்தி ஒன்றின் மூலம் அச்சுறுத்தல் விடுத்த ஒருவரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். இன்று நவம்பர் 26, செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் Saint-Étienne நகரில் இடம்பெற்றுள்ளது.

மாலை 6 மணி அளவில் இசம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதியில் நடந்து சென்ற பெண் ஒருவரை கத்தி வைத்து நபர் ஒருவர் மிரட்டியுள்ளார். காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டனர். கத்தியை கொடுத்துவிட்டு சரணடையும்படி அவரை காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

ஆனால் குறித்த நபர் அப்பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து அவரைக் கொல்லப்போவதாக மிரட்டியுள்ளார். இதனால் காவல்துறையினர் உடனடியாக தங்களது சேவைத்துப்பாக்கியால் குறித்த நபரை சுட்டுள்ளனர். காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.

இருதரப்பட்ட விசாரணைகள் இச்சம்பவம் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்