Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் சீரற்ற காலநிலை: வடக்கில் 48ஆயிரம் பேர் பாதிப்பு

இலங்கையில் சீரற்ற காலநிலை: வடக்கில் 48ஆயிரம் பேர் பாதிப்பு

27 கார்த்திகை 2024 புதன் 05:51 | பார்வைகள் : 241


வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 15 ஆயிரத்து 427 குடும்பங்களைச் சேர்ந்த 48 ஆயிரத்து 577 பேர் பாதிப்படைந்துள்ளனர் என்று மாவட்ட அரச அதிபர்கள் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்கு அறிக்கையிட்டுள்ளனர்.

இதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 40 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 436 அங்கத்தவர்கள் பாதிப்படைந்துள்ளதுடன் பலர் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதுடன் 34 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்றும் அறிக்கையிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் 536 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 861 அங்கத்தவர்கள் பாதிப்படைந்துள்ளதுடன் 56 குடும்பங்களைச் சேர்ந்த 175 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கின்றனர் என்றும் அறிக்கையிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 135 குடும்பங்களைச் சேர்ந்த 442 பேர் பாதிப்படைந்துள்ளதுடன் 50 குடும்பங்களைச் சேர்ந்த 153 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் அதேநேரம் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது என்றும் அறிக்கையிடப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 629 குடும்பங்களைச் சேர்ந்த 43 ஆயிரத்து 910 பேர் பாதிப்படைந்துள்ளதுடன் 459 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 547 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் அதேநேரம் 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்றும் அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதேநேரம் வவுனியா மாவட்டத்தில் 87 குடும்பங்களைச் சேர்ந்த 324 பேர் பாதிப்படைந்துள்ளனர் என்றும் அறிக்கையிடப்பட்டுள்ளது.

வவுனியாவில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான் பாயத் தொடங்கியுள்ளதுடன், தாழ்நிலப் பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பரந்தன் கிராம அலுவலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒரு அங்கத்தவரும், புளியங்குளம் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேரும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பாதிப்படைந்துள்ளனர்.

வெண்கல செட்டிகுளம் கிராம அலுவலர் பிரிவில் அதிவேக காற்றின் காரணமாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் பாதிப்படைந்ள்ளதுடன், ஒரு வீடும் பகுதியளவில் பாதிப்படைந்துள்ளது என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, வவுனியா மாவட்டத்தின் 120 இற்கும் மேற்பட்ட குளங்கள் தனது முழுக்கொள்ளளவை எட்டி மேலதிக நீர் வெளியேறி வருவதுடன், அநேகமான குளங்களில் 90 சதவீதமான அளவு நீர் நிறைந்துள்ளது.ர்தரப் பரீட்சைக்கு செயல்படாத முஸ்லிம் மற்றும் ஏனைய பாடசாலைகளை நேற்றும் இன்றும் மூடுவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் விக்ரமரத்ன ஆலோசனை வழங்கியுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்