Paristamil Navigation Paristamil advert login

முற்றுகைக்குள் திருகோணமலை

முற்றுகைக்குள் திருகோணமலை

27 கார்த்திகை 2024 புதன் 07:12 | பார்வைகள் : 128


சிங்கள அரசாங்கம் வடக்குகிழக்கில் உள்ள சிறுபான்மை தமிழ் முஸ்லீம் மக்களின் தாயகத்தின் மீதான தனது கட்டுப்பாட்டை  தொடர்ந்தும் விஸ்தரிக்கின்றது.

15 வருடங்களிற்கு முன்னர் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்த போதிலும், இந்த பகுதிகள் பெருமளவிற்கு இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்படுகின்றன.

இந்த நோக்கத்துடன் சிங்கள அரசாங்கம்,இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலை மாவட்டத்தில் நில அபகரிப்பை தீவிரப்படுத்துகின்றது.

அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர் தாயகப்பகுதிகளில் சிங்களவர்களை குடியேற்றுவதும்,சிங்களவர்களின் குடியேற்றத்தை அதிகரிப்பதும் இலங்கை சுதந்திரமடைந்த காலப்பகுதியிலிருந்து இடம்பெறுகின்றது.

இந்த புதிய ஆராய்;ச்சி 2009 இல் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்தது முதல் நில அபகரிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறித்தும்,தமிழ் முஸ்லீம் சமூகத்தினரின் அதிகாரங்களை மேலும் பறிப்பதற்காக இலங்கையின் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்தவர்களும் இராணுவத்தினரும் முன்னெடுத்துள்ள தந்திரோபாயங்கள் குறித்தும்  ஆராய்கின்றது.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஆறு பிரதானமான தமிழ் முஸ்லீம் பிரதேசசெயலகங்களில் தீவிர நில அபகரிப்பு இடம்பெறுகின்றது.இதன் காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் சனத்தொகையில் சிங்களவர்கள் 27 வீதமாக காணப்படுவதுடன் 36வீதமான நிலத்தை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர்.

புவியியல் ரீதியில் வடக்குகிழக்கை இணைக்கும் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவு,கடந்த பத்து வருடங்களில் மிகமோசமாக பறிபோயுள்ளது.

இந்த பிரதேச செயலாளர் பிரிவில் ஆகக்குறைந்தது 41164நிலத்தை அபகரித்துள்ளனர்.இது ஒட்டுமொத்த நிலப்பரப்பின் 50 வீதமாகும்.

அபிவிருத்தி திட்டங்கள்  என்ற போர்வையில்,சிங்கள விவசாயிகளை தமிழர் நிலப்பகுதிகளில் குடியேற்றும் செயற்பாட்டின் ஊடாக இதனை முன்னெடுக்கின்றனர் - இது சிங்களமயப்படுத்தல் எனப்படுகின்றது.

குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகள் உட்பட்ட பகுதிகளை அனுராதபுரத்தில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளுடன் இணைப்பதற்கான முயற்சிகளும் இடம்பெறுகின்றன.

சிங்கள மயமாக்கல் என்பது பௌத்த மயமாக்கலுடன் இணைந்து முன்னெடுக்கப்படுகின்றது.- பௌத்த மயமாக்கல்,என்பது குடிப்பரம்பல் மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கான தமிழர்கள் முஸ்லீம்களின் பகுதிகளில் விகாரைகளை விஸ்தரிப்பதாகும்.

குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் அபகரித்த 3887 ஏக்கர் நிலப்பரப்பில் 27க்கும் மேற்பட்ட புத்தவிகாரைகளை கட்டியுள்ளனர்.

பல பௌத்த ஆலயங்களை அரசாங்கம் வரலாற்று ரீதியில் முக்கியத்துவம் வாய்;ந்தது என வர்த்தமானி அறிவித்தலின் மூலம் பிரகடனப்படுத்தியுள்ளது.

விகாரைகளிற்கு பௌத்தபிக்குகள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் அதேவேளை இந்த பகுதிகளில் காணப்பட்ட, தமிழர்கள் வழிபாட்ட ஆதி தெய்வங்களின் ஆலயங்களை அழித்துள்ளனர். அல்லது அந்த பகுதிகளிற்கு செல்வதற்கு தடைவிதித்துள்ளனர்.

2020 இல் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் முகாமைத்துவத்திற்காக 11 பேர் கொண்ட செயலணியை நியமித்து,தொல்பொருள் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை இனம்கண்டு அவற்றை பாதுகாக்கும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்தார்.பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண தலைமையிலான இந்h குழுவில் ஆரம்பத்தில் தமிழர்கள்,முஸ்லீம்கள் இடம்பெற்றிருக்கவில்லை. அவர்கள் கிழக்கின் பெரும்பான்மை சமூகமாக காணப்பட்ட போதிலும் அவர்களை உள்வாங்கவில்லை.

செயலணியில் இடம்பெற்றிருந்த இரண்டு பௌத்த மததலைவர்களில் ஒருவரான பானமுரே திலகவன்ச திருகோணமலையை சிங்களமயப்படுத்தும் நடவடிக்கைகளிற்கு தலைமை தாங்கினார்.

இந்த செயலணி தற்போது செயற்படாத போதிலும்,பௌத்த விகாரைகளை கட்டுவதற்காக நிலங்களை அபகரித்தல் தடையின்றி இடம்பெறுகின்றது.

திருகோணாமலை மாவட்டத்தில் தமிழ் மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நிலத்தின் அளவு மக்களிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வளமான விவசாய நிலங்களும்,கடலோர நிலங்களும் பெருமளவில் அபகரிக்கப்பட்;டுள்ளதால் ,மக்கள் பாரம்பரிய வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்.

தங்கள் நிலங்கை மீட்டெடுப்பதற்காக  வந்தவர்கள் பல சட்டசிக்கல்களை குடியேற்றவாசிகளிடமிருந்து துன்புறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர்.அவர்களிற்கான அடிப்படை சேவைகள் மறுக்கப்படுகின்றன.

இந்த நிலை தொடர்ந்தால் அவர்களால் கிராமங்களில் வாழமுடியாத நிலை உருவாகலாம் எனஉள்ளுர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அறிக்கை இலங்கையின் வடக்குகிழக்கு மாகாணங்களில் தொடரும் சிங்கள மயமாக்கல் நிலஅபகரிப்பு இராணுவமயமாக்கல் குறித்த ஆதாரங்களை முன்வைப்பதுடன் வாய்மூல சாட்சிகளையும் முன்வைக்கின்றது.

தமிழ் முஸ்லீம் மக்கள் மீதான தனது இனரீதியான ஆதிக்கத்தை தொடர்வதற்பு இராணுவமயமாக்கல் அவசியம் என இலங்கை  அரசாங்கம் கருதுகின்றது.

இதன் காரணமாக பெருமளவு இராணுவபிரசன்னம் தொடர்கின்றது.

வடக்குகிழக்கில் அதிகரிக்கும் நிலத்தகராறுகள் வாழ்வாதாரத்தில் ஏற்படுத்தும் ஸ்திரதன்மை இழக்கச்செய்யும் பாதிப்புகள் குறித்து தனது 2024 மார்ச் அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்த ஐக்கிய நாடுகள்மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க்,பிற்போக்குதனமான சட்டங்கள்,ஏதேச்சதிகார அணுகுமுறைகள் போன்றவற்றால் இலங்கையில் பேண்தகு அமைதி நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என குறிப்பிட்டிருந்தார்.

இந்த அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள,இலங்கையின் இனவாத நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் செயற்பாடுகள் துன்பம் துயரம் அநீதி வெறுப்பு ஆகியவற்றை உருவாக்கி நாட்டில் அமைதிய நல்லிணக்கத்திற்கான வாய்ப்புகளை பாதிக்கின்றது.

அரசாங்கம் வடக்குகிழக்கை இராணுவமயமாக்கலில் இருந்து விடுவிக்கும்,தமிழ் முஸ்லீம் சமூகங்களின் அடிப்படை நில உரிமையை மதிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடாவிட்டால் அமைதியும் நல்லிணக்கமும் சாத்தியமாகாது

இலங்கையின் இரத்தக்களறி மிக்க 26 வருடங்கள் நீடித்த அழிவை ஏற்படுத்திய உள்நாட்டு யுத்தம் 2009ம் ஆண்டு முடிவிற்கு வந்தது.

பாதுகாப்பு வலயங்கள் என அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் வரவழைக்கப்பட்ட பொதுமக்கள் மீது அதன் பின்னர் இடம்பெற்ற இலங்கை படையினரின் ஈவிரக்கமற்ற குண்டுவீச்சினால் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்- இதனை உன்னிப்பாக உற்றுநோக்கிய பலர் இனப்படுகொலை என்றே அழைக்கின்றனர்.

தமிழீழ விடுதலைப்புலிகள் தலைமையிலான தமிழ் பிரிவினைவாதிகள்,பெரும்பான்மை சிங்கள பௌத்த அரசாங்கத்தை எதிர்த்த இந்த மோதல்,சுமார் 200,000 பேரின் உயிர்களை பறித்துடன் ஒரு மில்லியனிற்கும் மேற்பட்ட மக்களை இடம்பெயரச்செய்தது.

இந்த மோதல் நாட்டின் உட்கட்டமைப்பை அழித்தது,இலங்கையின் வடக்குகிழக்கில் உள்ள தமிழ் முஸ்லீம்களின் உயிர்கள் வாழ்வாதாரத்தின் மீது கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.

ஒரு தசாப்தகாலத்திற்கும் மேலாக- இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் ஓக்லாண்ட் நிறுவகம்,தமிழர்களின் பாரம்பரிய தாயகமான வடக்குகிழக்கில் காணப்படும் மனித உரிமை நிலவரத்தை உன்னிப்பாக அவதானித்து வந்துள்ளது.

2015 இல் ஓக்லாண்ட் நிறுவகம் வெளியிட்ட ஆரம்ப அறிக்கையான யுத்தத்தின் நீண்ட நிழல் - யுத்தத்திற்கு பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம்,பௌத்த விகாரைகளை அமைத்தல், சுற்றுலாதலங்களை அமைத்தல், வெற்றி நினைவுச்சின்னங்களை அமைத்தல்,தொல்பொருள் பாதுகாப்பு,வடக்குகிழக்கில் உள்ள சிங்களவர்களிற்கான விசேட பொருளாதார வலயம் போன்றவற்றின் மூலம்நிலம் அபகரிக்கப்படும் பல வழிமுறைகளை அம்பலப்படுத்தியது,

அதன் தொடர்ச்சியாக வெளியான அறிக்கைகள் இந்த பகுதிகளை சேர்ந்த மக்கள்,எதிர்கொள்ளும் துன்பங்கள், நீதிக்கான அவர்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் குறித்து பேசியது.

முடிவற்ற யுத்தம்-இலங்கையில் அழிக்கப்பட்ட தமிழர்களின் நிலம், வாழ்க்கை அடையாளம் ,என்ற அறிக்கை 2021 இல் வெளியானது.

 அபிவிருத்தி திட்டங்கள்  என்ற போர்வையில் ,இலங்கையின் வடக்குகிழக்கில் தமிழ் சிறுபான்மையினர் தொடர்ந்தும் துன்புறுத்தப்படுவது குறித்த அதிர்ச்சி தரும் புதிய ஆதாரங்களை அந்த அறிக்கை வெளியிட்டது. மேலும் வடக்குகிழக்கில் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்குடனும்,முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்கள் நிலங்களை அணுகுவதை தடுக்கும் நோக்குடனும், அரசாங்கத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் சிங்கள மயமாக்கல் தமிழர் பகுதிகளில் அதிகரித்துள்ளதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.

அந்த அறிக்கை தமிழ் மக்கள் பரந்துபட்ட அளவில் இராணுவமயப்படுத்தலில் சிக்குண்டுள்ளதையும்,ஆறு பேருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் அந்த பகுதியில் இராணுவத்தினர் காணப்படுவதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.

இலங்கையின் வடக்குகிழக்கு பகுதி தொடர்ந்தும் அதிகளவு இராணுவமயப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுகின்றது ,இலங்கை இராணுவத்தின் ஏழு பிராந்திய தலைமையகங்களில் ஐந்து இந்த பகுதியிலேயே காணப்படுகின்றது.

இலங்கையில் கடந்த தசாப்தங்களில் பல ஆட்சிமாற்றங்கள் இடம்பெற்றுள்ள போதிலும்,அனைத்து அரசாங்கங்களும் வடக்குகிழக்கில் நில ஆக்கிரமிப்பு அபகரிப்பு பௌத்த மயமாக்கல்,சிங்கள மயமாக்கல் என்பவற்றை தொடர்ந்துள்ளன.

நன்றி வீரகேசரி

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்