கனடாவில் கோர விபத்து- 2 பேர் பலி

27 கார்த்திகை 2024 புதன் 11:06 | பார்வைகள் : 3014
கனடாவில் கெனோராவின் 17ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் ட்ரக் வண்டிகள் இரண்டின் சாரதிகள் உயிரிழந்துள்ளனர்.
சாரதிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மூன்றாம் வாகனத்தின் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.