வரவுசெலவு : 49.3 அரசியலமைப்பை பயன்படுத்த வாய்ப்பு!!

27 கார்த்திகை 2024 புதன் 11:15 | பார்வைகள் : 8387
வரவுசெலவு திட்டத்தை நிறைவேற்ற அரசாங்கம் 49.3 எனும் அரசியலமைப்புச் சட்டத்தை பயன்படுத்து என பிரதமர் Michel Barnier தெரிவித்துள்ளார்.
செனட் சபை வரவுசெலவுத்திட்டத்தை ஆராய்ந்து வரும் நிலையில், சில தணிக்கைகளுடன் அவற்றை ஏற்றுக்கொள்ள செனட் சபை தயாராக உள்ளதாக அறியமுடிகிறது. பின்னர் அது பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வரும் போது, 49.3 எனும் அரசியலமைப்பு குறுக்குவழியினை அரசு பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு எதிர்க்கட்சிகள் பெரும் எதிர்ப்பு தெரிவிக்க தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தொலைக்காட்சி செய்தியில் நேரலையில் பங்கேற்ற பிரதமர் Michel Barnier, “அரசாங்கம் 49.3 அரசியலமைப்பை பயன்படுத்த வாய்ப்புள்ளதாக’ தெரிவித்தார்.
49.3 என்பது பாராளுமன்றத்தில் அவசரகாலத்தின் போது வாக்கெடுப்பின்றி சட்டம் ஒன்றை நிறைவேற்றுவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு முறையாகும். அதனை ஜனாதிபதி மக்ரோனின் முந்தைய பிரதம் Elisabeth Borne -பலதடவைகள் பயன்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.