மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறிய இந்திய கிரிக்கட் அணி
27 கார்த்திகை 2024 புதன் 11:50 | பார்வைகள் : 136
2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக டெஸ்ட் கிரிக்கட்டின் இறுதிப்போட்டிக்கான புள்ளிப்பட்டியலில் மீண்டும் இந்தியா (India ) முதலிடம் பெற்றுள்ளது.
ஏற்கனவே சொந்த மண்ணில் நியூஸிலாந்து அணியுடனான 3 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்தன் மூலம், இந்தியா புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.
இந்தநிலையில் கடந்த நான்கு நாட்களாக பேர்த்தில் நடைபெற்ற போர்டர்- கவாஸ்கர் கிண்ண முதல் டெஸ்டில் இந்தியா 295 ஓட்ட வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றதன் மூலம் மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதல்நிலை பெற்றுள்ளது.
அவுஸ்திரேலிய அணியுடனான எஞ்சியுள்ள நான்கு போட்டிகளில், மூன்றில் வெற்றி பெற்றால், இந்திய அணி, 2025 சர்வதேச கிரிக்கட் சம்மேளன டெஸ்ட் இறுதிப்போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுக்கொள்ளும்.
அவுஸ்திரேலிய அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான போர்டர்- கவாஸ்கர் கிண்ண முதல் போட்டியில் இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 150 ஓட்டங்களையும், இரண்டாம் இன்னிங்ஸில் 6 விக்கட்டுக்களின் இழப்புக்கு 487 ஓட்டங்களையும் பெற்றது.
அவுஸ்திரேலிய அணி, தமது முதல் இன்னிங்ஸில் 104 ஓட்டங்களையும் இரண்டாம் இன்னிங்ஸில் 238 ஓட்டங்களையும் பெற்றது.