Paristamil Navigation Paristamil advert login

மக்ரோனின் அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லா பிரேரனை! - கருத்துக்கணிப்பில் மக்கள் தெரிவித்த அதிர்ச்சி முடிவு!!

மக்ரோனின் அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லா பிரேரனை! - கருத்துக்கணிப்பில் மக்கள் தெரிவித்த அதிர்ச்சி முடிவு!!

27 கார்த்திகை 2024 புதன் 16:41 | பார்வைகள் : 4713


2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் வாசிக்கப்பட உள்ள நிலையில், பிரதமர் Michel Barnier இன் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரும் முடிவை எதிர்க்கட்சிகள் எடுத்துள்ளன. இந்நிலையில் அது தொடர்பில் புதிய கருத்துக்கணிப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

motion de censure எனப்படும் இந்த நம்பிக்கை இல்லா பிரேரணை தொடர்பில் பாராளுமன்றத்தில் வாக்கெடுக்கப்படும். அதில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டால் Michel Barnier இன் அரசாங்கம் கவிழ்க்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று இணையவழியாக BFMTV தொலைக்காட்சி மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் 53% சதவீதமானவர்கள் நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரவேண்டும் என தெரிவித்துள்ளனர். 46% சதவீதமானவர்கள் வேண்டாம் எனவும், 1% சதவீதமானவர்கள் பதிலளிக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவருவதற்கு 50% சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் ஆதரவு தெரிவிப்பது இதுவே முதன் முறையாகும்.

(நன்றி : BFMTV)

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்