நோர்து-டேம் தேவாலயத்து ஜனாதிபதி மக்ரோன் இறுதி விஜயம்!
28 கார்த்திகை 2024 வியாழன் 07:00 | பார்வைகள் : 504
நோர்து-டேம் தேவாலயம் மீள திறக்கப்படுவதற்கு தயாராகியுள்ளது. வரும் டிசம்பர் 7 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான ஒருவாரம் அங்கு சிறப்பு வழிபாடுகள், பிரார்த்தனைகள் இடம்பெற உள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், நாளை நவம்பர் 29, வெள்ளிக்கிழமை தேவாலயத்துக்கு நேரில் விஜயம் மேற்கொள்கிறார். திறப்புவிழாவுக்கு முன்பாக அவர் மேற்கொள்ளும் இறுதி விஜயம் இது என தெரிவிக்கப்படுகிறது. கட்டுமானப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், அதனை பார்வையிட மக்ரோன் அங்கு செல்கிறார்.
இதுவரை நோர்து-டேம் தேவாலயத்துக்கு பல தடவைகள் மக்ரோன் நேரில் சென்றிருக்கிறார். கடந்தவாரம் ரகசியமாக முன் அறிவித்தல் இன்றி விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இந்த தேவாலய திருத்தப்பணிகளுக்காக கிட்டத்தட்ட 2,000 பேர் பணிபுரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 7 ஆம் திகதி திறப்புவிழாவின் போது அவர்களுக்கு ஜனாதிபதி மக்ரோன் நறி தெரிவிப்பார் என அறிய முடிகிறது.