Paristamil Navigation Paristamil advert login

1000 வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்த நபரின் வாக்குமூலத்தால் அதிர்ச்சி

1000 வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்த நபரின் வாக்குமூலத்தால் அதிர்ச்சி

28 கார்த்திகை 2024 வியாழன் 05:42 | பார்வைகள் : 4589


ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள Dazaifu என்ற நகரில் மற்றவர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாகச் சந்தேகத்தின் பேரில் 37 வயதுடைய நபரை காவல்துறை கடந்த திங்கள்கிழமை அன்று காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.


விசாரணையில் தான் 1000 வீடுகளுக்குக்கள் இதுவரை அத்துமீறிப் புகுந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். அவ்வாறு மற்றவர் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைவது தனது மன அழுத்தத்தைக் குறைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

"மற்றவர்களின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைவது என்னுடைய ஒரு பொழுதுபோக்காகும், நான் அதை 1,000 தடவைகளுக்கு மேல் செய்துள்ளேன், யாராவது என்னைக் கண்டுபிடிப்பார்களா இல்லையா என்று யோசிக்கும்போது என் உள்ளங்கைகள் வியர்த்துவிடும்.


அந்த உணர்வினால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், இது என் மன அழுத்தத்தைக் குறைக்கிறது" என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்