உக்ரைனுக்கு விடுக்கப்பட்ட ஏவுகணை எச்சரிக்கை...
28 கார்த்திகை 2024 வியாழன் 08:42 | பார்வைகள் : 686
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகின்றது.
ஏவுகணை அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் தாக்குதல் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் பல பகுதிகளை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கார்கிவ், ஒடேசா மற்றும் பிற எட்டு பகுதிகளுக்கு ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது உக்ரைன் விமானப்படை உறுதி செய்துள்ளது.
கார்கிவ் மக்கள் உடனடியாக பதுங்கு குழிகளுக்கு செல்ல விமானப்படை முதலில் அறிவுறுத்தியது.
ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர முன்னாள் அமெரிக்க இராணுவ தளபதி Keith Kellogg என்பவரை டொனால்டு ட்ரம்ப் அறிவித்த 24 மணித்தியாலயத்தில் ரஷ்யா ஏவுகணைகளால் உக்ரைன் பகுதிகளை நடுங்க வைத்துள்ளது.