Paristamil Navigation Paristamil advert login

ஜனாதிபதி மக்ரோன் பதவிவிலக வேண்டும்... கருத்துக்கணிப்பு!!

ஜனாதிபதி மக்ரோன் பதவிவிலக வேண்டும்... கருத்துக்கணிப்பு!!

28 கார்த்திகை 2024 வியாழன் 12:25 | பார்வைகள் : 7609


பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு அது நிறைவேற்றப்பட்டால், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பதவிவிலக வேண்டும் என கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் விரைவில் வாசிக்கப்பட உள்ளது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையில்லாத Michel Barnier இன் அரசாங்கம் 49.3 எனும் சட்டமூலத்தை பயன்படுத்தி குறுக்குவழியில் அதனை நிறைவேற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமூலத்தை பயன்படுத்தினால் கண்டிப்பாக நம்பிக்கை இல்லா பிரேரணை (motion de censure) கொண்டுவருவோம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், நம்பிக்கை இல்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டால் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பதவி விலக வேண்டுமா என பொதுமக்களிடம் கேள்வி எழுப்பட்டது.

இந்த கேள்விக்கு, 63% சதவீதமானவர்கள் 'ஆம்' என பதிலளித்துள்ளனர். அவர்களில் 83% சதவீதமானவர்கள் இடதுசாரிக் சிந்தனை கொண்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 நாள்கள் முன்னர்

நினைவஞ்சலி

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்