Paristamil Navigation Paristamil advert login

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிரான பிடியாணை மீளப்பெறல்

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிரான பிடியாணை மீளப்பெறல்

28 கார்த்திகை 2024 வியாழன் 14:46 | பார்வைகள் : 262


புதிதாக தெரிவு செய்யப்பட்ட யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா நீதிமன்றில் சரணடைந்ததையடுத்து அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் வியாழக்கிழமை (28) மீளப்பெற்றுள்ளது.

2021 ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று, நிகழ்ந்த வீதி விபத்து தொடர்பாக ஆஜராகத் தவறியதற்காக டாக்டர் ராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

டாக்டர் அர்ச்சுனாவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டிருந்த நிலையில் நீதிமன்றத் திகதியை மறந்துவிட்டதாக நீதிமன்றில் தெரிவித்தார்.

இந்த உண்மைகளை கருத்திற்கொண்ட மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா, டாக்டர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெற தீர்மானித்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்