1944 செனேகல் படுகொலைகள் : பிரான்சே மேற்கொண்டதாக ஒப்புக்கொண்ட ஜனாதிபதி!!
29 கார்த்திகை 2024 வெள்ளி 08:00 | பார்வைகள் : 598
1944 ஆம் ஆண்டு இடம்பெற்ற செனேகல் படுகொலைகள் பிரெஞ்சு இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படிருந்ததாக 80 வருடங்களின் பின்னர் ஜனாதிபதி மக்ரோன் ஒப்புக்கொண்டுள்ளார்.
செனேகலின் எல்லையோக நகரமான Thiaroye இல் 1944 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் திகதி அன்று 300 பேர் கொல்லப்பட்டிருந்ததனர். மேற்கு ஆபிரிக்கர்கள் பலர் பிரெஞ்சு இராணுவத்தில் பணிபுரிந்ததனர். அவர்களுக்கும் பிரெஞ்சு இராணுவத்தினருக்கும் இடையே மோதல் வெடித்து ஆயுதங்கள் வைத்திருந்த பிரெஞ்சு இராணுவத்தினர் ஆபிரிக்க இராணுவத்தினரைச் சுட்டுக்கொன்றனர். பலர் அடைத்துவைக்கப்பட்டு பசி பட்டினியிலும் கொல்லப்பட்டிருந்தனர்.
இந்த படுகொலையை மேற்கொண்டது பிரெஞ்சு இராணுவத்தினரே மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டு வந்ததை, இதுவரை காலமும் பிரான்ஸ் மறுத்து வந்தது. இந்நிலையில், 80 ஆண்டுகள் கழித்து அதனை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் ஒப்புக்கொண்டுள்ளார்.
”அன்றைய நாளில், தங்களுக்கு முழுமையான முறையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என கோரிய இராணுவ வீரர்களுக்கும் துப்பாக்கி வீரர்களுக்கும் இடையே நடந்த மோதல் - ஒரு படுகொலையில் முடிந்தது. அதனை பிரான்ஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்!” என அவர் குறிப்பிட்டார்.