Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானிய போக்குவரத்துச் செயலளர்  திடீர் ராஜினாமா... 

பிரித்தானிய போக்குவரத்துச் செயலளர்  திடீர் ராஜினாமா... 

29 கார்த்திகை 2024 வெள்ளி 09:03 | பார்வைகள் : 789


பிரித்தானிய போக்குவரத்துச் செயலளர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ள விடயம் பிரித்தானிய அரசில்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய போக்குவரத்துச் செயலரான லூயிஸ் ஹே (Louise Haigh), தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், அவர் போக்குவரத்துத்துறைக்கு ஆற்றிய சேவைக்காக அவருக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன், எதிர்காலத்தில் அவர் ஆற்ற வேண்டிய பெரிய கடமை உள்ளது என்றும் கூறியுள்ளார்.


என்றாலும், லூயிஸின் ராஜினாமா பிரதமருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.


2013ஆம் ஆண்டு, Aviva என்னும் காப்பீட்டு நிறுவனத்தில் லூயிஸ் பணியாற்றிக்கொண்டிருக்கும் நேரத்தில், வழிப்பறிக் கொள்ளையர்களிடம் சிக்கினார்.


அவர்கள் அவரது உடைமைகளைக் கொள்ளையடித்துச் செல்ல, பொலிசில் புகாரளித்த லூயிஸ் என்னென்ன பொருட்கள் திருடப்பட்டன என்பது குறித்து பட்டியல் ஒன்றைக் கொடுத்திருந்தார்.

அதில் தனது மொபைலும் திருடுபோனதாக அவர் தெரிவிக்க, அவர் பணியாற்றிய காப்பீட்டு நிறுவனம் அவருக்கு புது மொபைல் ஒன்றைக் கொடுத்தது.


பின்னர் தனது மொபைல் திருடுபோகவில்லை என்பதை அறிந்துகொண்ட லூயிஸ், தனது பழைய மொபைலை ஆன் செய்ய, அதை அறிந்துகொண்ட பொலிசார் அவரை விசாரணைக்கு அழைத்தார்கள்.

மொபைல் திருடுபோனதாக அவர் ஏமாற்றியதாக லூயிஸ் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

பிரதமர் தன்னை போக்குவரத்துச் செயலராக தேர்ந்தெடுத்தபோது அவரிடம் இந்த விடயம் குறித்து தெரிவித்ததாகவும் பிரதமர் தனக்கு ஆதரவாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார் லூயிஸ். இன்னொரு விடயம், அவரது பெயர் பொலிசாரின் ஆவணங்களில் இல்லை.


என்றாலும், இந்த விடயம் குறித்து கன்சர்வேட்டிவ் கட்சியினர் கேள்வி எழுப்பிய நிலையில், உண்மை என்னவாக இருந்தாலும், இந்த விடயம் ஸ்டார்மர் அரசு தன் பணியைச் செய்வதற்கு இடையூறாக அமையலாம் என்பதால் தான் தனது பதவியை ராஜினாமா செய்வதாக லூயிஸ் தெரிவித்துள்ளார்.


 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்