Thanks Giving கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ்
29 கார்த்திகை 2024 வெள்ளி 09:20 | பார்வைகள் : 112
இந்திய வம்சாவளி நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் நன்றி செலுத்தும் தினத்தை கொண்டாடியுள்ளார்.
அறுவடையை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் நான்காவது வியாழன் அன்று அமெரிக்காவில் Thanks Giving கொண்டாடப்படுகிறது.
இந்த நிகழ்விற்காக நாசா அவர்களுக்கு பட்டர்நட் ஸ்குவாஷ், ஆப்பிள், மத்தி மற்றும் வான்கோழி போன்ற உணவுப் பொருட்களை வழங்கியதாக விண்வெளி வீரர்கள் குறித்த வீடியோவில் கூறியுள்ளனர்.
விண்வெளியில் நீண்ட காலம் தங்கியிருப்பதற்கான கவலைகளுக்கு மத்தியில், வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் இருவரும் "விண்வெளி நிலையத்தில் பாதுகாப்பாக உள்ளனர்" என்று நாசா சமீபத்தில் தெரிவித்திருந்தது.
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் தனது எடையை குறைப்பதாக கூறப்படும்போது, "நல்ல உணர்வுடன், உடற்பயிற்சி செய்து, சரியாக சாப்பிடுகிறேன்" என்றுக் கூறி வீடியோ வெளியிட்டிருந்தார்.
நாசாவின் கூற்றுப்படி, "சுனிதா மொத்தமாக 322 நாட்கள் விண்வெளியில் கழித்துள்ளார்", மேலும் அதிக எண்ணிக்கையிலான விண்வெளிப் பயணங்களைக் கொண்ட இரண்டாவது பெண் விண்வெளி வீராங்கனை ஆவார்.