போராட்டம் தொடர்கிறது.. புதிய திகதிகளை அறிவித்த விவசாயிகள்!!
29 கார்த்திகை 2024 வெள்ளி 11:56 | பார்வைகள் : 1567
உழவு இயந்திரங்களை வீதிகளில் நிறுத்தி போக்குவரத்து தடையை ஏற்படுத்தும் விவசாயிகளின் போராட்டம் மீண்டும் நாடளாவிய ரீதியில் இடம்பெற உள்ளது.
FNSEA தொழிற்சங்கம் இது தொடர்பில் தெரிவிக்கையில், எதிர்வரும் டிசம்பர் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நாடளாவியரீதியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அறிவித்தனர். “திங்கட்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் நாங்கள் மீண்டும் வீதிகளுக்கு இறங்குவோம். பிரதமர் எங்களைச் சந்திக்கவேண்டும்.” என குறித்த தொழிற்சங்கத்தின் தலைவர் Arnaud Rousseau தெரிவித்தார்.
இந்த போராட்டங்களினால் இல் து பிரான்ஸ் மாகாணத்துக்குள் போக்குவரத்து தடைப்படும் எனவும், பரிசை நோக்கி வரும் சாலைகள் முடக்கப்படும் எனவும், அதேபோன்றே நாட்டின் பெரும்பான்மையான இடங்களில் போக்குவரத்து தடைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.