Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் புதிய பருவ மாற்றம் தொடர்பில் எதிர்வுகூறல்

கனடாவில் புதிய பருவ மாற்றம் தொடர்பில் எதிர்வுகூறல்

29 கார்த்திகை 2024 வெள்ளி 12:21 | பார்வைகள் : 774


கனடாவில் குளிர்காலம் தொடர்பில்  வளிமண்ட திணைக்களம் எதிர்வு கூறல்களை வெளியிட்டுள்ளது.

புதிய பருவ மாற்றம் தொடர்பில் கனடிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதம வானியல் ஆய்வாளர் கிரிஸ் ஸ்கொட் எதிர்வு கூறல்களை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு குளிர் பருவநிலையில் நிலவியதை விடவும் இம்முறை கடுமையான குளிருடனான காலநிலை நிலவும் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு குளிர்காலத்தில் ஓரளவு வெப்பநிலை நீடித்து வந்தது எனினும் இம்முறை அந்த பருவ நிலையில் மாற்றத்தை அவதானிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் மேற்கு பகுதிகளில் அதிக அளவு குளிர் நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இம்முறை கிறிஸ்மஸ் காலத்தில் அதிக அளவு பனிப்பொழிவு ஏற்படுமா என்பது குறித்து இப்போதைக்கு எதிர்வுகூற முடியாது என தெரிவிக்கப்படுகிறது.

கிறிஸ்துமஸ் காலத்தில் வென்பனிப் படலம் படரும் சந்தர்ப்பங்களை மரபு ரீதியாக வைட் கிறிஸ்மஸ் என அடையாளப்படுத்துகின்றனர். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்