மலேசியாவில் 80 ஆயிரம் பேர் வெளியேற்றம்..
29 கார்த்திகை 2024 வெள்ளி 12:24 | பார்வைகள் : 1366
மலேசியாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு 4 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த வாரம் பெய்த கனமழையால் மலேசியாவின் பல மாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வடகிழக்கு Kelantan மற்றும் Terengganu பகுதிகள் ஆகியவை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
7 மாநிலங்களில் 80,589 குடியிருப்பாளர்கள் 467 தற்காலிக தங்குமிடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாக தேசிய பேரிடர் மையம் கூறியுள்ளது.
இதற்கிடையில், Kelantanயில் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக ஒரு தேடல் மற்றும் மீட்புக்குழு ஒன்று திரட்டப்பட்டுள்ளது என்று பேரிடர் மையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
வெள்ளத்தால் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வ5