நடிகை சமந்தாவின் தந்தை திடீர் மரணம்

29 கார்த்திகை 2024 வெள்ளி 12:43 | பார்வைகள் : 5145
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றார். தற்போது உடல்நலம் தேறி மீண்டும் பிஸியாக திரையுலகில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு இன்று திடீரென உயிரிழந்தார். இந்த தகவலை சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். "மீண்டும் நாம் சந்திக்கும் வரை என் இதயம் உடைந்திருக்கும், தந்தையே," என உடைந்த இதயத்தின் எமோஜியை அவர் பதிவிட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். ஆங்கிலோ இந்தியரான சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபுவின் மரணத்திற்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1