Paristamil Navigation Paristamil advert login

இந்தியா- அவுஸ்திரேலியா டெஸ்ட்: முக்கிய போட்டியாளர் விலகல்

இந்தியா- அவுஸ்திரேலியா டெஸ்ட்: முக்கிய போட்டியாளர் விலகல்

30 கார்த்திகை 2024 சனி 08:22 | பார்வைகள் : 1868


இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் விலகியுள்ளார்.

இந்தியா- அவுஸ்திரேலியா மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வருகிற 6ம் திகதி தொடங்கவுள்ளது.

முதல் டெஸ்டில் 295 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை தோற்கடித்தது இந்தியா.

அடுத்த போட்டியை வெல்ல வேண்டும் என்ற உற்சாகத்தில் இந்தியா களமிறங்கும் நிலையில், வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் அவுஸ்திரேலியா களமிறங்கும்.

இந்நிலையில் அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் காயம் காரணமாக விலகியுள்ளார்.

மேலும் அடுத்த போட்டிகளுக்கு தயாராவதற்காக ஓய்வு தேவைப்படுவதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்